கூலாய், நவம்பர்-23, ஜோகூர், கூலாய், தாமான் மேவா வீடமைப்புப் பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம், 2 முதியவர்களின் அழுகியச் சடலங்கள் மீட்கப்பட உதவியுள்ளது.
துர்நாற்றம் தாங்காமால் பக்கத்து வீட்டார் போலீசில் புகார் செய்ததை அடுத்து, நேற்று பிற்பகலில் தீயணைப்பு-மீட்புப் துறையின் உதவியுடன் கதவை உடைத்து போலீசார் சடலங்களை மீட்டனர்.
இறந்துகிடந்தவர்கள் முறையே 65, 67 வயதிலானவர்கள்.
தொடக்கக் கட்ட விசாரணையில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
எனவே, தற்போதைக்கு அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ (Tan Seng Lee) கூறினார்.