கெமமான், டிச 17- வாட்சாப் மோசடி முதலீடு திட்டத்தில் முதலீடு செய்த
73 வயது வர்ததகர் ஒருவர் 704,000 ரிங்கிட்டை இழந்தார். கவர்ச்சிகரமான வருமானம் கிடைக்கும் என்று செயலியில் வெளியான ஒரு விளம்பரத்தை கண்டு அந்த ஆடவர் போலீ முதலீட்டு திட்டத்தில் பணத்தை பறிகொடுத்தார் என கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் DSP வான் முகமட் வான் ஜபார் ( Wan Muhamad Wan Jaffar) தெரிவித்தார். L-5 Cucc Investment என்று கூறப்பட்ட முதலீட்டு திட்டத்தில் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் அந்த முதியவர் பணத்தை பட்டுவாடா செய்ததன் மூலம் மொத்தம் 704,000 ரிங்கிட்டை ஏமாந்துள்ளார்.
கூடுதல் லாபம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போன்று எந்தவொரு லாபமும் கிடைக்காததைத் தொடர்ந்து அந்த நபர் போலீசில் புகார் செய்ததாக டி.எஸ்.பி வான் முகமட் கூறினார். குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே எந்தவொரு முதலீடு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன் அந்த திட்டம் உண்மையானதா அல்லது அதன் நம்பகத்தன்மை குறித்து பேங்க் நெகாரா மலேசியாவின் ன் Semak Mule CCID செயலியில் பரிசோதிக்கும்படி அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.