
புக்கிட் காயு ஹீத்தாம், பிப்ரவரி-25-புக்கிட் காயு ஹீத்தாமில் (Bukit Kayu Hitam) மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு எதிராக இன்று காலையில் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதிர்நிலை துணை கமிஷனர் முகமட் நசாருடின் எம்.நசிர் (Mohd Nasaruddin M. Nasir ) இன்று காலையில் தனது காரில் தொழுகைக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு சந்தேகப் பேர்வழிகள் அவரை சுட்டதாக ஊடக தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
முகமட் நசாருடின் வாகனத்தை நெருங்கி இரண்டு முறை சுட்டபின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் அவர் காயம் அடையவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பிறகு விரிவான தகவல் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



