
கோலாலம்பூர், செப்டம்பர் 24 – பலகாலமாக அதிகாரத்தை பயன்படுத்தி கொலை, கொள்ளை, பாராங்கு தாக்குதல், தீ வைத்து சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வந்த குற்றக் கும்பல், போலீசார் மேற்கொண்ட Ops Jack Sparrow எனும் சிறப்பு நடவடிக்கையில் பிடிப்பட்டனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை (JSJ) மற்றும் மாநில போலீஸ் தலைமையகம் (JSJ) இணைந்து நடத்திய இச்சோதனையில் 19 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுமார் 33 பேர் கொண்ட இந்தக் குற்ற கும்பல் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததென அறியப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட 17 பேருக்கு மொத்தம் 80 குற்றப் பதிவுகள் உள்ளன எனவும் அதில் 34 குற்றங்கள் போதைப்பொருள் சம்பவங்கள் தொடர்பானது என்று கூறப்பட்டது.
நபர்கள் அனைவரும் பாதுகாப்புச் சட்டத்தின் (SOSMA) கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் குற்றச்செயல்களிலும் போதைப்பொருள்களிலும் ஈடுபடாமல் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.