கோத்தா பெலுட் , டிச 13 – கோத்தா பெலுட்டில் (Kota Belud) கார் மீது மரம் விழுந்ததில் அதில் பயணம் செய்த ஐவர் காயம் அடைந்தனர்.
காலை மணி 9.30 க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில் புரோடுவா கெலிசா (Perodua Kelisa ) காரில் பயணம் செய்த அனைவரும் காயம் அடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் கோத்தா பெலுட் (Kota Belud) மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே பொதுமக்கள் உதவியோடு காரில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கோத்தா பெலுட் தீயணைப்பு மற்றும் மீடபுக் குழுவின் தலைவர் முகமட் சயஸ்வான் (Muhammad Syazwan Latun) தெரிவித்தனர்.
பொது தற்காப்பு படையினரின் உதவியோடு தீயணைப்புப் படை வீரர்கள் வாகனத்தின் மீது விழுந்த கிடந்த மரத்தை சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி வெட்டி அப்புறப்படுத்தினர்.