
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற இடத்தில், பெண்ணொருவர் போலீஸாரின் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து புகார் கிடைத்திருப்பதை, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா உறுதிப்படுத்தினார்.
டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற பேரணி தொடர்பில், புகார்தாரரோடு சேர்த்து மொத்தம் 9 பேர் சம்பவத்தன்று வங்சா மாஜூ போலீஸ் நிலையம் வந்திருந்ததாக அவர் சொன்னார்.
விசாரணை நடைபெற்று வருவதால், அதற்கு இடையூறு ஏற்படும் வகையில் யூகங்களை எழுப்ப வேண்டாமென அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.