
கோலா கங்சார் , அக் 2 – கோலா கங்சாரில் Menora சுரங்கப்பாதைக்கு அருகிலுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 257 ஆவது கிலோமீட்டரில் ராணுவ டிரக் லோரி விபத்தில் சிக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்ததோடு மற்றொருவர் காயமடைந்தார்.
நேற்று மாலை மணி 4.59 க்கு இந்த விபத்து குறித்து அவசர அழைப்பை பெற்றதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான தலைவர் Shazlean Mohd Hanafiah தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கோலா கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏழு ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஒரு ராணுவ லோரி விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே பொதுமக்களின் உதவியோடு ஐவர் காப்பாற்றப்பட்டனர்.
மேலும் இருவர் அந்த லோரியில் சிக்கிக் கொண்டனர். முதல் நபர் மாலை மணி 5.54 அளவில் மீட்கப்பட்டவேளையில் காயத்திற்கு உள்ளான இரண்டாவது நபர் மாலை மணி 6.14 அளவில் மீட்கப்பட்டார்.
இந்த மீட்பு பணியில் இரண்டு வண்டிகளைச் சேர்ந்த 11 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.