Latestமலேசியா

சபாக் பெர்ணாமில் சகப் பணியாளர் கொலை; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பள்ளிப் பாதுகாவலர்

குவாலா சிலாங்கூர், செப்டம்பர்-30 – இரு வாரங்களுக்கு முன்னர் சகப் பணியாளரைக் கொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில், தமிழ்ப்பள்ளியொன்றின் பாதுகாவலர் இன்று குவாலா சிலாங்கூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

செப்டம்பர் 15-ஆம் தேதி சபாக் பெர்ணாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பாதுகாவலர் குடிலில் வைத்து, 43 வயது Raja Azman Raja Abdul Tahir-ரைக் கொன்றதாக, 26 வயது Wan Shahrizan Wan Kadir குற்றம் சாட்டப்பட்டார்.

கொலைக்குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறைத் தண்டனையுடன் 13-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

கொல்லப்பட்ட பாதுகாவலரின் சடலம், செப்டம்பர் 16-ஆம் நாள் சபாக் பெர்ணாம், தாமான் பெர்மாத்தா, Jalan Pasir சாலையோரமாக கிடந்த காரின் பூட்டுக்குள் (boot) கண்டெடுக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!