![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/Screenshot-2024-09-27-at-1.24.22-PM.png)
கோலாலம்பூர், செப்டம்பர் -27 – சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிக் கொண்டே ஒரு கையில் செல்ஃபி எடுக்கும் பெண்ணின் வீடியோ வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது.
X தளத்தில் பகிரப்பட்ட அவ்வீடியோவைப் பார்த்தால், அப்பெண் தனது இடது கையால் கைப்பேசியைப் பிடித்துக் கொண்டு செல்ஃபி படமோ அல்லது வீடியோவோ எடுப்பது தெரிகிறது.
தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என்பதை அறியாத அப்பெண்ணின் செயல், பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்களால் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில், முன்னே போகும் லாரியுடன் சற்று நெருக்கமாகவே அவர் மோட்டார் சைக்கிளோட்டிச் செல்வது பார்க்கும் நமக்கே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
லாரி திடீரென பிரேக் போட்டால் என்னாவது? என வலைத்தளவாசிகள் கொந்தளிக்கின்றனர்.
அதோடு, வழிப்பறிக்கு இவரே இடம் கொடுப்பது போல், கைப்பையை பக்கவாட்டில் தொங்கவிட்டுச் செல்கிறார்.
இதனால் சினமடைந்த இணையவாசிகள், இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அப்பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசை வலியுறுத்தி வருகின்றனர்.