
தாய்லாந்து, பிப்ரவரி 20 – தாய்லாந்து பேங்கோக் (Bangkok) அருகே நடந்த கொள்ளை வழக்கில், போலீசார் சிங்க நடனமாடுபவர்கள் போலbவேடமணிந்து 33 வயது ஆடவனைக் கைது செய்த சம்பவம் தாய்லாந்து போலீசின் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சுமார் 20 லட்சம் பாத் அதாவது 64,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள புத்த மதப் பொருட்கள் மற்றும் இரண்டு புத்தர் சிலைகள் திருடப்பட்டதாக இதற்கு முன்னர் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பல வாரங்கள் கண்காணிப்பிற்கு பிறகு, சீன பெருநாள் விழாவில் சிங்க நடனக் குழுவில் கலந்து கொண்டு சந்தேக நபருக்கு அருகில் சென்ற போலீசார் திடீரென திருடனைத் தரையில் தள்ளி கைது செய்தனர்.
கைதான ஆடவன் முந்தைய திருட்டு மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபட்டவன் என போலீசார் தெரிவித்தனர்.



