
சிரம்பான், மார்ச்-9-சிரம்பான், Taman Widuri Indah Water நீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள நீர் சேமிப்புத் தொட்டியில், 12 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.
நேற்று தனது 2 தம்பிகளுடன் அவன் அங்கு மீன் பிடிக்கச் சென்ற போது இத்துயரம் நிகழ்ந்தது.
சுமார் 5 மீட்டர் ஆழமுள்ள நீர் தொட்டிக்குள் அவன் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தீயணைப்பு – மீட்புத் துறையினர் சம்பவ இடம் விரைந்து சிறுவனைத் தொட்டியிலிருந்து மீட்டனர்.
எனினும், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேல் விசாரணைக்காக, சிறுவனின் உடல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.



