
கோலாலாம்பூர், செப்டம்பர்-11 – சிறார் படைப்பான 2025 SaReGaMaPa Li’l Champs நேரடி கலை நிகழ்ச்சி, வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி பட்டவொர்த் PICCA மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
முதன் முறையாக பினாங்கில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, உங்களுக்காகப் பிரத்யேகமாகக் கொண்டு வருவது SAM JEWELLERY SRI TANGGAM; முதன்மை ஏற்பாட்டு ஆதரவு நிறுவனம் Tasly Malaysia ஆகும்.
அதே வேளை இந்நிகழ்ச்சி பினாங்கில் நடைப்பெற பெரும் ஆதரவு தெரிவித்து அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்துள்ள பினாங்கு வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு அவர்களுக்கு நன்றி தெர்வித்துக் கொண்டார் Vishal Streamyx நிறுவனத்தின் இயக்குநர் விஷால்.
இந்தக் கலைநிகழ்ச்சியில் பொது மக்கள் குட்டிசுகளின் இனிமையான குரலில் மனதைக் கவரும் கானங்களை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டார் விஷால்.
நம் நாட்டின் ஹேமித்ரா, தமிழ்நாட்டின் divine திவினேஷ் உள்ளிட்ட பல இளம் கலைஞர்கள் இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பு பினாங்கு ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றனர்.
இதனிடையே வழக்கமாக Vishal Streamyx நடத்தும் நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் இந்த நிகழ்ச்சியிலும் தொடருமென்றார் அவர்.
Interview
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும்
Li’l Champs கலை நிகழ்ச்சிக்கு திரளாக வந்து பங்கேற்று இளசுகளின் இசை விருந்தை கண்டு களிப்பர் என விஷால் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில் இந்நிகழ்ச்சியின் மற்றுமொரு ஆதரவு நிறுவனமான subbulakshmi cosmetics-க்கும் அவர் நன்றித் தெரிவித்து கொண்டார்.
இந்தக் கலை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஊடக ஆதரவாளர் வணக்கம் மலேசியா.
டிக்கெட்டுகளை வாங்க விரும்புவோர் உடனே அழையுங்கள்