
சைபர்ஜெயா, ஏப்ரல்-28-சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.
’Huayan The Pureland Learning Centre’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் நிர்வாகி இது குறித்து விளக்கம் அளிக்க நேரில் அழைக்கப்பட்டார்.
அவ்வாடவரிடம் சைபர்ஜெயாவில் உள்ள MCMC வாக்குமூலம் பெறப்பட்டது.
விசாரணைக்காக அவரது கைப்பேசி மற்றும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான 1998-ஆம் ஆண்டு MCMC சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வேளையில், போலீஸ் தனியாக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான உணர்ச்சிகரமான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்று பொது மக்களை ஆணையம் எச்சரித்துள்ளது.



