
பமாக்கோ, ஜூலை-28-மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 75 வயது இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர், சுமார் 3 மாத கால சிறைபிடிப்புக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, குஜராத்தைச் சேர்ந்த Dhiru Ramani கடந்த ஏப்ரல் மாதம் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டார்.
ஆரம்பத்தில் கடத்தல்காரர்கள் சுமார் 100 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்ட நிலையில், அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பத்தினர் நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின், தொகை குறைக்கப்பட்டது.
கடைசியில், சுமார் 44 கோடி ரூபாய் அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 18.77 மில்லியன் பிணைத்தொகையாக வழங்கப்பட்டு, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அவருடன் கடத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Dhiru Ramani தற்போது நலமுடன் இருப்பதாகவும், உள்ளூர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



