Latestஉலகம்

டயானாவின் பிரபலமான ‘ரிவெஞ்ச் டிரெஸ்’ டிசம்பரில் ஏலம்

நியூயார்க், செப்டம்பர் 11 – மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த பிரபல ‘ரிவெஞ்ச் டிரெஸ்’ வரும் டிசம்பர் மாதம் நியூயார்க்கில் ஏலம் விடப்படவுள்ளது.

1994ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற விருந்தில் டயானா இந்தக் கருப்பு நிற, தோள்பகுதி திறந்த ஆடையை அணிந்திருந்தார். அதே நாளில், அவரது கணவர் அப்போதைய இளவரசர் சார்ல்ஸ், தொலைக்காட்சி நேர்காணலில் திருமணத்திற்கு வெளியே தமக்கு உறவு இருந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் (Christina Stambolian) வடிவமைத்த இந்த ஆடை, 1.5 லட்சம் முதல் 3 லட்சம் அமெரிக்க டாலர் வரை விலைக்கு ஏலம் போகுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத் தொகையில் ஒரு பகுதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஆடை, டயானா 1997ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழப்பதற்கு முன்பாகவே, புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் தொண்டு நிறுவனங்களுக்காக ஏற்கெனவே ஒருமுறை ஏலம் விடப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!