Latestமலேசியா

PKR கூட்டரசு மற்றும் மாநில நிர்வாகங்களை வலுப்படுத்த வேண்டும் – அன்வார் வலியுறுத்து

கோத்தா கினபாலு, செப்-11-மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகங்களை மக்கள் நீதிக் கட்சியான PKR தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் கொள்கைகள் மக்களுக்கு நேரடியான மற்றும் தெளிவான பலன்களை வழங்குவதை உறுதி செய்வது கட்சியின் முக்கியப் பொறுப்பு. மேலும், கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவைப் பெறுவதுடன், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதமருமான அன்வார் வலியுறுத்தினார்.

சபா, மக்களின் குரலைத் தொடர்ந்து வலுவாக எடுத்துச் செல்லும் முக்கியச் சக்தியாகவும், நாட்டின் மாற்றம் மற்றும் சீர்திருத்தப் பயணத்தை முன்னெடுக்கும் கட்சியாகவும் PKR தொடர்ந்து செயல்படும். அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் தேர்தல் இயந்திரத்தை இப்போதே வலுப்படுத்த வேண்டும் என Facebook பதிவொன்றில் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அன்வார், சபா மாநிலத்தின் தற்போதைய விவகாரங்கள், அம்மாநில மக்களின் நலன் ஆகியவை தொடர்பில் விவாதிப்பதற்காக, சபா PKR மாநிலத் தலைமைக் குழுவுடன் குறுகிய சந்திப்பொன்றை நடத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!