Latestமலேசியா

ஊராட்சி மன்றத் தேர்தலை மலாய்க்காரர்கள் எதிர்க்கிறார்கள் என நினைக்க வேண்டாம் – பெர்சாமாவின் நிக் நஸ்மி

கோலாலம்பூர், செப்டம்பர்-11,நாட்டில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் கொண்டு வருவதை மலாய் வாக்காளர்கள் எதிர்க்கிறார்கள் என அரசியல்வாதிகள் தவறாகக் கணிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் வலியுறுத்தியுள்ளார்.

​ஊராட்சித் தேர்தல் குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், கோலாலம்பூரிலும் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான மலாய் வாக்காளர்கள் உ
ஊராட்சித் தேர்தலையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரையும் விரும்புவதாக ஆய்வுகள் காட்டுவதாகச் சுட்டிக் காட்டினார்.

​ஊராட்சித் தேர்தலால் மலாய்க்காரர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற அச்சம், காலனித்துவக் காலத்தைச் சேர்ந்த பழைய அரசியல் மனப்பான்மையாகும் என்றார் அவர்.

தற்போதைய நிலவரப்படி, கோலாலம்பூரின் மிகப்பெரிய மக்கள்தொகைப் பிரிவினராக 48 விழுக்காட்டுடன் மலாய்க்காரர்களே உள்ளனர்.

​எனவே, ஊராட்சித் தேர்தலை முற்றிலுமாக நிராகரிப்பதற்குப் பதிலாக, அனைத்து இனத்தினரையும் உள்ளடக்கிய விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகளை ஆராயலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தலோடு ஊராட்சித் தேர்தல் முறையையும் கூடுதலாக மீண்டும் கொண்டு வருவதற்கு அம்னோ உள்ளிட்ட மலாய்க்காரர் கட்சிகள் நீண்டகாலமாக எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!