
சண்டியாகோ, பிப் 26 – சிலி (Chile) நாட்டில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டதால் அந்நாட்டின் சுரங்க நடவடிக்கை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டன.
Arica முதல் வடக்கே Parinacota, தெற்கே Los Lagos மற்றும் தலைநகர் Santiago விலும் சாலை விளக்கு , நகரின் முக்கிய போக்குவரத்து வசதிகள் செயல் இழந்ததால் லட்சக்கணக்கான மக்களின் நடமாட்டம் பாதிக்கப்பட்டது.
மின் விநியோகத்தில் ஏற்பட்ட தடைக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதோடு அதனை மீண்டும் வழக்க நிலைக்கு கொண்டு வருவதற்காக சிலி நாட்டின் மின்சார விநியோகிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
நாட்டின் வட பகுதிக்கான மின் இணைப்பு முறையில் ஏற்பட்ட கோளாறினால் இந்த தடை ஏற்பட்டதாகவும் இணைய தாக்குதல் எதுவும் இதற்கு காரணம் அல்ல என சிலி உள்துறை அமைச்சர் Carolina Toha தெரிவித்தார்.