மனிதர்களுக்கு முன்னே 1,000 தெஸ்லா ரோபோக்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் கனவுத் திட்டத்தில் இலோன் மாஸ்க்

டெக்சஸ், செப்டம்பர்-14,
மனிதர்களுக்கு முன்னதாகவே 1,000 தெஸ்லா ரோபோக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் கனவுத் திட்டத்தை அறிவித்துள்ளார் உலகக் கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்.
இந்த மேம்பட்ட ரோபோக்கள் அங்கு கட்டுமானம், வள சேகரிப்பு, அத்தியாவசிய அடிப்படை வசதிகள் போன்ற பணிகளை மேற்கொண்டு, எதிர்கால குடியேற்றத்திற்கான தளத்தை அமைக்கும்.
2050-ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு 1 மில்லியன் மனிதர்களை அனுப்புவதே அவரின் தலையாயத் திட்டம்.
எனவே, முதலில் ரோபோக்களை அனுப்புவதன் மூலம் அபாயங்களை குறைத்து, மனிதர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இலோன் மாஸ்க்கின் Space X நிறுவனத்தின் நோக்கமாகும்.
இத்திட்டம், மனித வாழ்வை பல கோள்களில் பரப்பும் மாஸ்கின் நீண்டகால கனவை பிரதிபலிக்கிறது.
AI அதிநவீன தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் இணைந்து, அறிவியல் புனைகதையை நிஜமாக்கும் முயற்சியாக இது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.