Latestமலேசியா

சுங்கை பட்டாணியில் சம்பவம்: ஆடவர் வெட்டிக்கொலை; கிட்டத்தட்ட துண்டாகும் அளவுக்குப் போன தங்கையின் கை

சுங்கை பட்டாணி, மார்ச்-10-கெடா, சுங்கை பட்டாணி, தாமான் கெம்பாஸில் கூர்மையான ஆயுதத்தால் நடந்த கொடூர தாக்குதலில், இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது தங்கை கடுமையாக காயமடைந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 20 வயது இளைஞர் உடலில் சரமாரியாக வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது தங்கை, கையில் கடுமையான காயம் ஏற்பட்டு, கையை இழக்கும் நிலையில் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 2 ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைதாகியுள்ளனர்; தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது; என்றாலும், அது மதுபோதையால் நிகழ்ந்தது அல்ல என்பது மட்டும் உறுதியாகியுள்ளதாக குவாலா மூடா போலீஸ் கூறியது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!