மலாக்கா, நவம்பர்-22 – மலாக்கா, மாலிம் ஜெயா, சுங்கை மாலிமில் சுமார் 3 மீட்டர் நீளம், 200 கிலோ எடை கொண்ட ஆண் முதலைப் பிடிபட்டுள்ளது.
வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN உயிருள்ள இரைகளை வைத்த பொறியில், நேற்று காலையே முதலை சிக்கியது குறித்து, ஆற்றில் மீன்பிடித்த சிலர் தகவல் கொடுத்தனர்.
ஆனால், பகலில் பிடித்தால் அவை இறந்துபோகும் அபாயமிருப்பதால், SOP நடைமுறைக்கு ஏற்ப மாலையில் வெயில் தணிந்ததும் முதலை பொறியிலிருந்து பிடிக்கப்பட்டது.
அது, இவ்வாண்டு சிக்கியுள்ள Tembaga வகையைச் சேர்ந்த மூன்றாவது முதலையென மலாக்கா PERHILITAN கூறியது.
பிடிபட்ட முதலை, பாதுகாப்பான வேறு வாழ்விடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், பொது மக்கள் பாதுகாப்புக் கருதி சுங்கை மாலிம் ஆற்றில் தொடர்ந்து பொறி வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.