
செப்பாங், அக் 7 –
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் நகர் மையத்திற்கு வருவதற்கு சுற்றுப்பயணி ஒருவரிடம் 836 ரிங்கிட் கட்டணம் விதித்த சட்டவிரோத டாக்சி ஓட்டுநர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.
சட்டப்பூர்வ அனுமதியின்றி சேவைகளை வழங்கியதோடு தரை பொதுபோக்குவரத்து சட்டத்தின் 205 (1) விதியின் கீழ் 40 வயதுடைய சந்தேகப் பேர்வழியான பெண் மீது குற்றஞ்சாட்டப்படும். அவர் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட்வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள்வரை சிறை அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம்.
மாஜிஸ்திரேட் கைரத்துல் அனிமா ஜெலானி முன்னிலையில்
( Khairatul Animah Jelani ) அவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. அந்த பெண் தனது தோழர் ஒருவருடன் இன்று காலையில் நீதிமன்றத்திற்கு வந்தார். சாலை போக்குவரத்து தொடர்பான வழக்குளை கையாளும் அதிகாரியை அவர் சந்தித்தார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அப்பெண் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் ( Azrin Borhan ) நேற்று தெரிவித்திருந்தார்