Latestமலேசியா

சுற்றுலா அமைச்சரை மாற்றுங்கள்; Veteran UMNO அமைப்பு பிரதமருக்குக் கோரிக்கை

கோலாலம்பூர், நவம்பர்-26 – சுற்றுலா அமைச்சர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங்கை ( Datuk Seri Tiong King Sing) மாற்றி விட்டு, தகுதி வாய்ந்த வேறு யாரையாவது நியமிக்குமாறு, அம்னோ மூத்தத் தலைவர்கள் அமைப்பான Veteran UMNO பிரதமரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டை பிரபலப்படுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பிலிருக்கும் அமைச்சரே, மலேசியா அமைதியும் பாதுகாப்பும் அற்ற நாடு போல பேசி வருகிறார்.

இது உண்மையிலேயே அவமானத்திற்குரியது என Veteran UMNO பொதுச் செயலாளர் டத்தோ முஸ்தபா யாக்கோப் ( Datuk Mustapha Yaakub) சாடினார்.

அறிவிப்பு மற்றும் விளம்பரப் பலகைகளில் மொழி பயன்பாடு விவகாரத்தை வேண்டுமென்றே சர்ச்சையாக்கி, மலாய் மொழிக்கு எதிரானவர் என்பதையும் அவர் காட்டிக் கொள்கிறார்.

இதுவோர் அமைச்சருக்கு அழகல்ல என டத்தோ முஸ்தபா சொன்னார்.

தலைநகரில் தேசிய மொழியில் அறிவிப்பு மற்றும் விளம்பர பலகைகளை வைக்காத வணிக வளாகங்களில், கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL அண்மையில் பேரளவிலான சோதனைகளை நடத்தியதை, கிங் சிங் விமர்சித்திருந்தார்.

சீன சுற்றுப் பயணிகளே மலேசியா ஓர் இனவாத நாடா எனக் கேட்கும் அளவுக்கு, DBKL-லின் நடவடிக்கை எல்லை மீறியப் பொறாமையின் வெளிப்பாடாக இருந்ததாக அவர் கூறிக் கொண்டார்.

அறிவிப்புப் பலகைகளைக் குறி வைப்பதற்கு பதிலாக, கோலாலம்பூரில் அடிப்படை வசதிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சங்களை அதிகரிப்பது போன்ற பயனுள்ள காரியங்களில் DBKL ஈடுபட வேண்டுமென கிங் சிங் அறிவுறுத்தியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!