சென்னை, அக்டோபர்-17, கோலாலம்பூரிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுலா விசாவில் அக்டோபர் 13-ஆம் தேதி சென்னை சென்றிறங்கிய மலேசியப் பெண்ணிடம், 2 பெரிய பயணப் பெட்டிகள் இருந்தது கண்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதால் அப்பெண்ணின் உடைமைகளை சுங்கத் துறைகள் அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்பெட்டிகளில் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 52 அரிய வகை பச்சோந்திகளும், இந்தோனீசியக் காடுகளில் வாழும் 4 சியாமாங் குரங்குக் குட்டிகளும் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவற்றை பறிமுதல் செய்ததோடு, அம்மலேசியப் பெண்ணையும் கைதுச் செய்தனர்.
அப்பெண்ணிடமிருந்து அந்த அரிய வகை உயிரினங்களை வாங்கிச் செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்த சென்னை நபரும் கைதானார்.
பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் தத்தம் சொந்த நாடுகளுக்கே திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்குப் பொருட்களைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது இது மூன்றாவது முறையாகும்.