
செப்பாங், ஏப்ரல்-12-சிலாங்கூர், செப்பாங்கில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 34 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வெள்ளிக் கிழமை Bandar Sunsuria அடுக்குமாடி வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட பெண், செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகார் கிடைத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், 22 வயது தனியார் பல்கலைக்கழக மாணவரை கைதுச் செய்துள்ளனர்.
சந்தேக நபர், அண்மையில் தான் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அறை வாடகைக்கு எடுத்தவர் எனக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கானக் காரணத்தைக் கண்டறியும் மேல் விசாரணைக்காக அவ்வாடவர் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 10 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
கைதான இளைஞர் போதைப்பொருள் எதுவும் உட்கொண்டிருக்கவில்லை; அவருக்கு பழையக் குற்றப்பதிவுகளும் இல்லையென, செப்பாங் போலீஸ் தலைவர் Norhizam Bahaman கூறினார்.



