
நிபோங் திபால், ஜூன்-24- இரண்டாவது பினாங்கு பாலத்தில் கார்களுக்கும் லாரிகளுக்கும் ஒதுக்கப்பட்ட பாதையில், அண்மையில் உயர் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் கூட்டமாக பயணித்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, செபராங் பிறை செலாத்தான் போலீஸ் கூறியது.
பத்து காவானிலிருந்து பத்து மாவோங் நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
அச்செயல் அவர்களுக்கு மட்டும் ஆபத்தானது அல்ல; மற்ற வாகனமோட்டிகளுக்கும் தான் என போலீஸ் நினைவுறுத்தியது.
எனவே 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
அந்த மோட்டார் சைக்கிளோட்டிகளின் செயல் 33 வினாடி வீடியோ வாயிலாக முன்னதாக வைரலாகி, வலைத்தளவாசிகளின் கண்டனங்களைப் பெற்றது.