Latestமலேசியா

ஜனவரி 20 முதல் STR 2026 உதவி விநியோகம்*

 

 

புத்ராஜெயா, ஜனவரி-14 – 2026-ஆம் ஆண்டுக்கான STR ரொக்க உதவியின் முதல் கட்ட விநியோகம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கும்.

 

5 மில்லியன் பெறுநர்கள் பயனடையும் வகையில், அந்நோக்கத்திற்காக மொத்தம் RM1.1 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

உதவிப் பெறுநரில் 3.7 மில்லியன் குடும்பங்கள் ஆவர்; மற்றவர்கள் வாழ்க்கைத் துணையற்ற 1.3 மில்லியன் மூத்த குடிமக்கள் ஆவர்.

 

அவரவர் வருமானத் தகுதிக்கேற்ப, பெறுநர்கள் RM100 முதல் RM500 வரை பெறுவார்கள்.

 

வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு நேரடியாகக் கணக்கில் செலுத்தப்படும்; வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் Bank Simpanan Nasional கிளைகளில் ரொக்கமாகப் பெறலாம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 

இவ்வேளையில், SARA எனப்படும் Sumbangan Asas Rahmah மாதாந்திர உதவியும் மேம்படுத்தப்பட்டு, 8 மில்லியன் மக்கள் பயனடைகின்றனர்.

 

அவர்களில், வறுமைக் கோட்டுக் கீழ் உள்ள 400,000 பேர் eKasih தரவுத் தளத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், STR மற்றும் SARA ஒதுக்கீடு இவ்வாண்டு RM15 பில்லியனை எட்டியுள்ளது.

 

இதுவே வரலாற்றில் மிக உயர்ந்த ஒதுக்கீடாகும்.

 

இவ்வுதவிகளுக்கான புதிய விண்ணப்பங்களையும், மேல்முறையீடுகளையும் இவ்வாண்டு நெடுகிலும் STR, SARA அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கங்களில் செய்ய முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!