
கோலாலம்பூர், ஏப் 10 -ஜாசின், Pantai Siringகில் உள்ள ஒரு கோவிலில்
அல்லா Allah மற்றும் “Bismillahirrahmanirrahim” என்ற வார்த்தைகளை எழுதியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மனநலப் பிரச்னைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான அந்த சந்தேக நபர் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் அவர் போஸீஸ் ஜாமினில் ‘விடுவிக்கப்பட்டதாக ஜாசின் போலீஸ் தலைவர் லீ ராபர்ட் (Lee Robert )கூறினார்.
மேல் நடவடிக்கைக்காக இது தொடர்பான விசாரணை அறிக்கை அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த அந்த கோயில் இன்று இடிக்கப்பட்டதாக Serkam சட்டமன்ற உறுப்பினர் ஸைடி ஆத்தான் (Zaidi Attan )தெரிவித்தார்.
அனைத்து சமய பொருட்களும் வெளியேற்றப்பட்ட பின்னர் அக்கோயில் இடிக்கப்பட்டது.
நில உரிமையாளரின் பிரதிநிதிகள், கட்டிட உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கிடையே நேற்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Zaisi Attan சுட்டிக்காட்டினார்.



