கோலாலம்பூர், செப்டம்பர் 18 – ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில், விபத்தில் சிக்கிய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் தனிப்பட்ட மருத்துவக் குழு அவசர சிகிச்சை வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளன.
மன்னரைப் பின்தொடர்ந்து அவசரக்கால மருத்துவ நிபுணர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்று கொண்டிருந்த போது, இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட இரு மோட்டர் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒருவர் மன்னரின் அம்புலன்ஸ் வாயிலாகக் கோலாலம்பூர் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.