
சிங்கப்பூர், டிசம்பர்-22 – சிங்கப்பூர், புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, வெடிகுண்டு போல தோன்றிய சந்தேகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு எற்பட்டது.
காலை 7.10 மணியளவில் தேவாலயத்தில் உள்ள கால்வாயில் அப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார உடனடியாக இடத்தைச் சுற்றி வளைத்து, அனைவரையும் வெளியேற்றினர்.
இராணுவ வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
பரிசோதனையில் அந்தப் பொருள் உண்மையில் 3 அட்டைச் சுருள்கள் மற்றும் கருப்பு நாடாவால் ஒட்டப்பட்ட கம்பிகள் என்றும், வெடிக்கும் கூறுகள் எதுவும் இல்லை என்றும் உறுதிச் செய்யப்பட்டது.
எனினும், 26 வயது தேவாலய தன்னார்வலர் ஒருவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டார்.
இது குறித்து கருத்துரைத்த உள்துறை அமைச்சர் கே. ஷண்முகம், “வெடிகுண்டு என நம்ப வைத்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இது ” எனக் கூறினார்.
கடந்தாண்டு இதே தேவாலயத்தில் பாதிரியார் கிறிஸ்டோபர் லீ மீது தாக்குதல் நடந்ததை இச்சம்பவம் நினைவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது



