Latestமலேசியா

ஜோகூரில் புதிய ஆட்சிக் குழு: பன்னீர் செல்வம் உட்பட 4 புதிய முகங்கள், 6 பேர் தங்கள் பதவிகளில் தொடர்கின்றனர்

ஜோகூர் பாரு, ஜூலை-18 – தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜோகூர் மாநிலத்திற்கான புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காசி, இன்று அதிகாரப்பூர்வமாக 10 பேர் கொண்ட புதிய ஆட்சிக் குழுவை அறிவித்துள்ளார்.

இந்த புதிய நிர்வாகத்தில் 4 புதிய முகங்கள் இணைந்துள்ளனர்.

அவர்களில் ம.இ.காவின் பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் பி. பன்னீர் செல்வமும் அடங்குவார்.

அவருக்கு, ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் ரவின் குமார் கிருஷ்ணசாமி அப்பொறுப்பில் இருந்தார்.

மற்ற மூவர் முறையே Kukup சட்டமன்ற உறுப்பினர் Md Israk Abdullah, Panti சட்டமன்ற உறுப்பினர் Dr Mohd Naqib Ghazali, Pulai Sebetang உறுப்பினர் Hasrunizah Hassan ஆவர்.

மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிச் செய்யும் வகையில், டத்தோ Mohd Jafni Md Shukor, Mohd Hairi Mad Shah, Lee Ting Han உள்ளிட்ட அறுவர் ஆட்சிக் குழு பதவிகளில் தொடர்கின்றனர்.

முன்னதாக, புக்கிட் செரீன் அரண்மனையில் ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு மகோத்தா துங்கு இஸ்மாயில் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 48 இடங்களில் வெற்றிப் பெற்று அடைந்த அமோக வெற்றியைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!