
ஜோகூர் பாரு, டிசம்பர் 4 – சமூக ஊடகங்கள் வாயிலாக சட்டவிரோத பணக் கடன்களை ஊக்குவித்து, பின்பு அக்கடன்களை திரும்ப பெறுவதற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் செய்து வந்த கும்பல் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில், கடந்த மாதம் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் வீடுகளில், அனுமதியின்றி வண்ணச் சாயங்களை வீசி பின்பு தீ வைத்து மிரட்டல் விடுத்த 2 ஆடவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார்..
அவ்விரு சந்தேக நபர்களும் கடன் பெற்றவர்களின் வீடுகளில் தீ வைப்பதற்கு 800 ரிங்கிட் ஊதியத்தை பெற்று வந்தனர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர்களை கைது செய்ததால் ஜோகூர் மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில் சுமார் 17 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. முதல் கட்ட சிறுநீர் பரிசோதனையில் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களுக்கள் சட்டவிரோத பணக் கடன்களை விளம்பரப்படுத்தும் இணைய விளம்பரங்களை பின்பற்றாமல் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.



