Latestமலேசியா

ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை; 40 கள்ளக்குடியேறிகள் கைது

ஜோகூர் பாரு, ஏப்ரல்-10-ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிகாலையில் நடத்திய அதிரடிச் சோதனையில், 40 கள்ளக்குடியேறிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

‘Ops Sapu’ எனப்படும் இந்த நடவடிக்கை, Kampung Baru Muafakat பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது.

அங்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் நெரிசலான நிலையில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது.

கைதானவர்கள், 2 முதல் 59 வயதிலான பாகிஸ்தான், மியன்மார் மற்றும் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களிடம் செல்லுபடியாகும் பயணப் பத்திரங்கள் இல்லை; சிலர் விசா காலத்தை மீறி தங்கியிருந்தனர்.

அனைவரும் மேல் விசாரணைக்காக Setia Tropika குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!