Latestமலேசியா

2022ஆம் ஆண்டிலிருந்து சமூக ஊடக தளங்களில் குறைந்தது 2,000 ஆபாச பதிவுகள் அகற்றம் – பாமி

கோலாலம்பூர், பிப் 25 – 2022 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 15ஆம்தேதிவரை சமூக ஊடக தளங்களில் இருந்து மொத்தம் 1,993 ஆபாச பதிவுகள் மற்றும் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் 3,670 இணையதளங்கள் பொருத்தமற்ற உள்ளடக்கங்களுக்காக MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைத்தால் தடுக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் ( Fahmi Fadzil ) தெரிவித்தார்.

சட்டம் 588 இன் அடிப்படையில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் செய்த விண்ணப்பங்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் 1,993 ஆபாச இடுகைகள் அகற்றப்பட்டன.

பாதுகாப்பான இணைய சூழலை உறுதி செய்வதற்காக, இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்ப சேவை வழங்குநர்
சி உரிமத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் எட்டு மில்லியன் பயனர்களைக் கொண்ட ஒவ்வொரு சமூக ஊடகம் மற்றும் ஆன்லைன் செய்தியிடல் தளத்திற்கு MCMC கட்டாயமாக்கியுள்ளது என்று பெரிக்காத்தான் நேசனல் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹலிமா அலி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது பாமி தெரிவித்தார்.

இணையத் தளங்களில் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் MCMC ஒரு குறிப்பிட்ட குழுவைக் கொண்டிருப்பதையும் பாமி சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!