
ஜோகூர் பாரு, ஜூன்-9 – ஜோகூர் பாருவில் சாலை அடாவடியில் ஈடுபட்டு வைரலான 40 வயது சிங்கப்பூர் ஆடவர் கைதாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மலேசிய வாகனமோட்டி செய்த புகாரின் அடிப்படையில் நேற்று மாலை அந்நபர் கைதானதை, ஜொகூர் பாரு உத்தாரா போலீஸ் தலைவர் MS பல்வீர் சிங் உறுதிப்படுத்தினார்.
அவர் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என உறுதியாகியுள்ள நிலையில், விசாரணைக்காக அவரைத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவுள்ளது.
முன்னதாக சந்தேக நபரின் கார் வழியை மறைத்துக் கொண்டிருந்ததால் புகார்தாரர் ஹார்ன் அடித்ததே பிரச்சனைக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.
இருவருக்கும் வாக்குவாதம் மூண்டு, ஒரு கட்டத்தில் சந்தேக நபர் புகார்தாரரின் BMW காரை எட்டி உதைத்தார்.
இதனால் காருக்கு சிறிய சேதம் ஏற்பட்டது;
எனினும் காரோட்டிக்கு காயமேற்படவில்லை.
இச்சம்பவத்தின் வீடியோ வைரலாகி இரு நாட்டு வலைத்தளவாசிகள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.