
ஜோகூர் பாரு, பிப்ரவரி-15 – நேற்று ஜோகூர் பாலத்தில் நட்ட நடு சாலையில் சண்டையிட்டுக் கொண்ட 2 ஆடவர்களை, போலீஸ் அடையாளம் கண்டு வருகிறது.
Facebook-கில் வைரலான வீடியோ தொடர்பில் விசாரணைத் தொடங்கியிருப்பதாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
நேரில் பார்த்த சாட்சிகளும் கண்டறியப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இரு ஆடவர்கள் கைகலப்பில் ஈடுபடும் 10 வினாடி வீடியோ லாரி ஓட்டுநர் ஒருவரால் பதிவுச் செய்யப்பட்டு முன்னதாக வைரலானது.
2 Toyota Vellfire MPV வாகனங்களிலிருந்து இறங்கி வந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டனர்.
உடனடியாக மற்ற வாகனமோட்டிகள் தலையிட்டு அவர்களை விலக்கி விட்டனர்.
அவ்வீடியோ சிங்கப்பூர் வலைத்தளவாசிகள் மத்தியிலும் வைரலாகி பலவித கருத்துக்களைப் பெற்று வருகிறது.