கோலாலாம்பூர், ஜன 10 – இந்த ஞாயிற்றுக்கிழமைவரை பஹாங் மற்றும் ஜோகூரில்
பல இடங்களில் தொடர்ச்சியாக அபாயகரமான நிலையில் மழை பெய்யும் என Met Malaysia எனப்படும் மலேசிய வானிலைத்துறை எச்சரித்துள்ளது. பஹாங்கில் ரொம்பின், ஜெரன்டுட், மாரான் ,குவாந்தான் Bera, Pekan ஆகிய இடங்களிலும் , ஜோகூரில் பத்து பஹாட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி தங்காக், சிகமாட் ,மூவார் மற்றும் ஜோகூர் பாருவில் கடுமையாக மழை பெய்யும் என இன்று காலை மணி 11.35 மலேசிய வானிலைத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் திரெங்கானுவில் உலு திரெங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமமானிலும் , நெகிரி செம்பிலானில் கோலாப் பிலா, ஜெம்போல் மற்றும் தம்பினிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும். சரவாக்கில் கூச்சிங், செரியான், Samarahan , ஸ்ரீ அமான், பெத்தோங், சரிக்காய், சிபு, முக்கா, காப்பிட் மற்றும் பிந்துலுவிலும் கடுமையாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.