
டப்ளின், மார்ச்-26- அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் உள்ள விமான நிலையத்தில், விமானத்தைத் தவற விட்டதால் ஆவேசமடைந்து, 20 வயது இளைஞர் குடிபோதையில் பெரும் இரகளையில் இறங்கினார்.
இதனால் விமான முனையமே களேபரமாகி சேதங்களும் ஏற்பட்டன.
சட்டை அணியாமல், கழுத்தில் பாதி முகமூடியை அணிந்திருந்த அந்நபர், சேவை முகப்பிடத்திலிருந்து ஒரு பொருளைக் கிழித்து, முனையத்தின் குறுக்கே வீசியதன் மூலம் குழப்பத்தைத் தொடங்கினார்.
புறப்பாடு நுழைவாயில் அருகே நாற்காலிகள் மற்றும் ஒரு பெரிய மேசையை கூட அவர் தூக்கி எறியும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
தங்கள் கண்முன்னே நடப்பவற்றை பயணிகள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
தனது வசைபாடலை நிறுத்தாமல், ஒரு பொருளையும், அதைத் தொடர்ந்து நாற்காலி மேசையையும் அவர் தொடர்ந்து வீசுகிறார்.
ஒரு கட்டத்தில், ஒரு ஜோடி துணிகளும் காற்றில் பறந்தன; எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அவ்விளைஞர் கேமராவை நோக்கி தனது கைகளை நீட்டி, கவனத்தை ஈர்த்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த விமான நிலைய ஊழியர்களும் பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கை எடுப்பதோடு காட்சிகள் முடிவடைகின்றன.
குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதன் பேரில் அந்நபர் கைதாகி, நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டார்.
இன்யொரு முறை அவரை இந்த டப்ளின் விமான நிலையத்தில் பார்க்க வேண்டியதில்லை என நாங்கள் நம்புகிறோம் என விமான நிலைய அதிகாரத் தரப்பு கூறியது.