
குவாலா பிலா, பிப்ரவரி-25-டிக் டோக் நேரலையில் திறந்தவெளியில் உணவு உண்டு, தண்ணீர் குடித்ததாகக் கூறி, நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் 27 வயது பெண் நேற்று கைதுச் செய்யப்பட்டார்.
இரவு 10 மணிக்கு வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்ட பின் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக் கிழமை மாலை 6.45 மணியளவில், டிக் டோக்கில் தன்னை பின்தொடர்பவர்களுடன் நேரலையாக பேசிக்கொண்டிருந்த போது அப்பெண் தண்ணீர் குடித்ததும், உணவு உண்டதும் வைரலான வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது.
இதையடுத்து இஸ்லாத்தை அவமதித்ததன் பேரில் 1992 ஆம் ஆண்டு ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக, மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறை கூறியது.
மத உணர்வுகளை மதித்து, ரமலான் மாதத்தின் புனிதத்தைக் காக்க அனைவரும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.



