Latestமலேசியா

என் மகன்களின் சொத்து சட்ட விரோதமானது என எம்.ஏ.சி.சி கூறவில்லை – டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர்,ஆகஸ்ட்-5- தனது மகன்களின் சொத்து சட்டவிரோதமானது என MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறவில்லையென முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்திருக்கிறார்.

தனது மகன்களான Tan Sri Mokhzani மற்றும் Mirzan ஆகியோரின் அறிவிப்புகளில் நிறுவனம் திருப்தி அடைந்துள்ளதாக Maccயின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி முன்பு கூறியதாக டாக்டர் மகாதிர் சுட்டிக்காட்டினார்.

Mokhzani மொத்த சொத்துக்களை சுமார் 1 பில்லியன் ரிங்கிட் என்றும், தனிப்பட்ட மதிப்பு 316 மில்லியன் ரிங்கிட் என்றும், Mirzan மொத்தம் 246.2 மில்லியன் ரிங்கிட் சொத்துக்களை 120 மில்லியன் ரிங்கிட் என்றும் அறிவித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், Mokhzani மற்றும் Mirzan தங்கள் சொத்துக்கள் தெளிவற்ற அல்லது சட்டவிரோத வழிகளில் பெறப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், அதை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டும் என்று அன்வார் கூறியதாக செய்திகள் வெளியாகின.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மகன்களின் சொத்து மதிப்பு குறித்து கூறியதற்கு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

இந்தச் செல்வத்தின் ஆதாரங்களை அறியாமல் அசாம் திருப்தி அடைந்தாரா? என்று அவர் வினவினார்.

MACC என் மகன்களிடம் பல முறை, ஒவ்வொரு முறையும் பல மணி நேரம் விசாரித்தது. அறிவிக்கப்பட்டபடி செல்வத்தின் ஆதாரங்களைப் பற்றி MACC கேட்டதா?

எங்கள் சொத்துக்கள் அனைத்தையும் விற்று வருமானத்தை அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று அன்வார் கோருகிறாரா?

எந்த அடிப்படையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார் என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!