உலகம்
டெல்லியில் ஆபத்தில் முடிந்த திருமண ‘Haldi’ சடங்கு; ஹைட்ரோஜன் பலூன்கள் வெடித்து மணமக்களுக்கு தீக்காயம்

டெல்லி, நவம்பர் 25 – டெல்லியில், மகிழ்ச்சியில் தொடங்கிய திருமண ‘Haldi’ சடங்கு ஒன்று விபரீதத்தில் முடிந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாகலமாக தொடங்கிய அச்சடங்கு விழாவில் மணமக்கள் மேடைக்கு நுழையும் போது , எதிர்பாராதவிதமாக விழா அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஹைட்ரோஜன் பலூன்கள் திடீரென வெடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அச்சம்பவத்தில் தீக்காயங்களுக்கு ஆளான மணமக்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் நிகழ்ந்த அந்த சம்பவம் அவர்களைப் பெரும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் திருமண வைபவங்களில் பாதுகாப்பற்ற அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தும் அபாயம் குறித்து மீண்டும் எச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.



