
தென்னஸீ, ஏப்ரல்-4-அமெரிக்காவில், சிலர் கோவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் இரத்தத்தை ஏற்க மறுக்கும் புதிய நிலை உருவாகியுள்ளது.
சில நோயாளிகள், உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சைகள் தாமதமானாலும் பரவாயில்லை, தடுப்பூசி எடுக்காதவர்களின் இரத்தம் மட்டுமே வேண்டுமென அடம்பிடிப்பதாக, தென்னஸீ பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த தயக்கத்தின் காரணமாகவே, 2024, 2025 ஆண்டுகளில் குறைந்தது 15 சம்பவங்களில், பொதுவானதாக இல்லாமல் நேரடி இரத்த தானத்திற்கு குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.
இந்த பிடிவாதத்தால் 4 சந்தர்ப்பங்களில், அவசர சிகிச்சைகள் தாமதமாகி, குழந்தைகள் உள்ளிட்ட நோயாளிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், மருத்துவ நிபுணர்கள் இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும், தடுப்பூசி எடுத்தவர்களின் இரத்தம் பாதுகாப்பானதே என்றும் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலை பெரும்பாலும் தவறான தகவல்களின் விளைவாக ஏற்பட்டதாகவும், இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, பொது மக்கள் அறிவியல் ஆதாரங்களை நம்ப வேண்டும் என்றும், தவறான தகவல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



