Latestமலேசியா

தனிப்பட்ட தகவலை இணையத்தில் பகிருவது குற்றம்; doxxing மீது கடும் நடவடிக்கைப் பாயுமென IGP எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜனவரி-25 – Doxxing எனப்படும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அனுமதி இல்லாமல் இணையத்தில் வெளியிடும் செயலுக்கு எதிராக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கட்டாயமாக சட்ட நடவடிக்கைப் பாயும் என டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

Doxxing சம்பவங்கள் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம், மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றார் அவர்.

அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்னையில் சிக்கிக் கொண்ட FMT முன்னாள் செய்தியாளர் Rex Tan-னின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டதால் அவருக்குத் தேவையில்லாத தொந்தரவு மற்றும் மிரட்டல்கள் ஏற்பட்டுள்ளன.

அது குறித்து கருத்துரைத்த போது IGP அவ்வாறு சொன்னார்.

இது தனியுரிமை மீறல் மட்டுமல்ல, பொது மக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தானது என அவர் நினைவுறுத்தினார்.

எதையும் பகிருவதற்கு முன் யோசிக்கவும்; ஒருவரின் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை அனுப்பினாலும் அது குற்றமாகக் கருதப்படும்.

எனவே அனைவரும் தனியுரிமையை மதித்து நடக்க வேண்டும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!