Latestமலேசியா

தமிழ் மண்ணில் அங்கீகாரம்: தான் ஸ்ரீ ஹனிஃபாவுக்கு கணியன் பூங்குன்றனார் விருதுப் பெற்றார்

சென்னை, ஜனவரி-13-நாட்டின் சிறந்த கல்விமான்களில் ஒருவரான தான் ஸ்ரீ Dr மொஹமட் ஹனிஃபா அப்துல்லா (MOHAMED HANIFFA BIN HJ. ABDULLAH) தமிழக அரசின் கணியன் பூங்குன்றனார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

கணியன் பூங்குன்றனார் விருது என்பது, கல்வி, சமூக மேம்பாடு, பெண்களை வலுப்படுத்துதல், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து, உலகளவில் சிறந்து விளங்கும் தமிழர்களை கௌரவிப்பதாகும்.

அவ்வகையில் சென்னை வர்த்தக மையத்தில், உலகத் தமிழர்கள் ஓரிடத்தில் சங்கமிக்கும் அயலகத் தமிழர் தினம் 2026 நிகழ்வில், அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

‘தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ எனும் கருப்பொருளில் இந்நிகழ்வு ஞாயிற்றுக் கிழமைத் கிழமைத் தொடங்கியது.

இரண்டாவது நாளான நேற்று, MAHSA குழும இயக்குநர் வாரியத்தின் நிர்வாகத் தலைவருமான ஹனிஃபாவுக்கு, கல்விப் பிரிவில் சிறந்த பங்களிப்பினை வழங்கியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர் பெருமக்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!