Latestமலேசியா

தம்பினில் 16 வயது பெண் பாலியல் பலாத்காரம்; 34 வயது ஆடவன் கைது

தம்பின், ஜூலை 6 – தம்பின் கெமாஸ் ( Gemas) அருகேயுள்ள பழத்தோட்டத்தில் 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 34 வயது ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிதெண்டன் அமிருடின் சாரிமான் (Superintendent Amiruddien Sariman) கூறுகையில், சந்தேக ஆடவன் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அப்பெண்ணுடன் அறிமுகமாகியிருக்கின்றான். நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று, பழத்தோட்டத்தில் உள்ள குடிசையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் சந்தேக ஆடவன் அவனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தேகநபர் ஜூலை 12ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!