
Dharma ,MADANI, Programme, applications, extended, until, 19th ,November
புத்ராஜெயா, நவம்பர்-5,
தகுதிப் பெற்ற இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு மானியம் வழங்கும் ‘2025 தர்மா மடானி’ திட்டத்திற்கான விண்ணப்பக் காலம், இன்று நவம்பர் 5 மாலை 6 மணியிலிருந்து நவம்பர் 19 மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் துறையின், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா ஓர் அறிக்கையில் அதனை அறிவித்தது.
சமூகச் சேவை மையங்களாக மாற்றும் நோக்குடன், 1,000 இந்து ஆலயங்களுக்கு தலா RM20,000 நிதியுதவியை
வழங்குவதே இந்த ‘தர்மா மடானி’ திட்டமாகும்.
இதற்கு இன்னும் விண்ணப்பிக்காத ஆலயங்கள் திரையில் காணும் கூகள் பாரத்தில் (Google Form) அவ்வாறு செய்யலாம்.
விண்ணப்பங்கள் முழுமையாகவும், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்திருப்பதையும் உறுதிச் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேற்கொண்டு விவரங்களை மித்ராவின் www.mitra.gov.my என்ற இணைய அகப்பகத்திலும் அதன் ஃபேஸ்புக் பக்கத்திலும் காணலாம்.
தொடர்புக்கு: 03-8886 6221 | ✉ infomitra@mitra.gov.my



