Latestமலேசியா

தலைக் கவசத்தால் மகளை தாக்கினார் தந்தை மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர் , ஜன 14 – தனது 15 வயது மகளை தலைக் கவசத்தால் தாக்கியதாக இன்று கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மலாக்கா , ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் மறுத்தார்.

செம்பனை குலை வெட்டும் தொழிலாளியான 46 வயதுடைய அந்த நபர் மாஜிஸ்திரேட் மஷனா சினின்( Mazana Sinin ) முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

கடந்த டிசம்பர் 13 ஆம் தேதியன்று தாமான் ஆயர் மெர்பாவிலுள்ள தனது வீட்டின் வரவேற்பரையில் தனது மகளை தாக்கி காயம் விளைவித்ததாக தண்டனைச் சட்டத்தின் 324 ஆவது பிரிவு மற்றும் 326 ஆவது பிரிவு A யின் கீழ் அந்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம். அந்த நபருக்கு 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு இந்த குற்றச்சாட்டு மீண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி மறுவாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!