Latestமலேசியா

தலைநகரில் சுற்றுலா மையங்களில் சட்டவிரோத புகைப்படக் கலைஞர்களுக்கு சிறப்பு அனுமதி கிடையாது – ஹன்னா இயோ

புத்ரா ஜெயா , ஏப் 5- நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் பல சுற்றுலாத் தலங்களில் செயல்படும் சட்டவிரோதமாக புகைப்படம் எடுப்பவர்களுக்கு’ சிறப்பு அனுமதிகள் வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்காது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் சாலைப் பயனர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு (KLCC) அருகிலுள்ள சந்திப்பிற்குத் தனது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு நடந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரச்னைகள் இருந்ததைக் கண்டதாகவும் அவர் கூறினார்.

அந்தப் பயணத்தின் மூலம், நாங்கள் கண்டது ஒரு பாதுகாப்புப் பிரச்னையாகும். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக, உரிமம் வழங்குவதை நாங்கள் பரிசீலிக்க முடியாது என்று புத்ராஜயாவில் இளம் தலைமுறைக்கான அனைத்துலக மொழித் திறன் மேம்பாடு மற்றும் புத்ராஜயா சமூக நடமாட்ட உதவித் திட்டத்திற்குப் பிறகு ஹனா இயோ கூறினார்.

சட்டவிரோத புகைப்படக்காரர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளையும் , சுற்றுலா அம்சத்தையும் மட்டும் தாம் கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர் மேயர் டத்தோ பட்லூன் மக் உஜுட், (Fatkun Mak Ujud ) ,கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் KLCC-யில் உள்ள பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில்,சட்டவிரோத புகைப்படும் எடுப்பவர்களின் நடவடிக்கை குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

அந்த இடங்களில் கோலாலம்பூர் மாநாகர் மன்றம் ரகசிய கண்காணிப்பு கருவிகளை பொருத்தியுள்ளதோடு போலீஸ் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!