Latestமலேசியா

தவறான புரிதலால் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட மோதல்; ஆடவர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 5 – Pekan Kepong அடுக்குமாடி குடியிருப்பின் கீழ், இரண்டு ஆடவர்களுக்கிடையே நடைபெற்ற சண்டை தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக, அந்த இரண்டு ஆடவர்களும் அடிதடியில் இறங்கியுள்ளனர்.

சண்டையை நிறுத்துமாறு அருகில் இருந்தவர்கள் தடுத்தும், அவர்கள் தொடர்ந்து அடித்துக் கொள்வதை காணொளியின் வழி பார்க்க முடிகிறது.

மற்றொரு காணொளியின் வழியோ, அந்த சண்டையில் ஒருவர் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறுவதைக் கேட்க முடிகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்திய செந்தூல் காவல்துறை உதவி கமிஷனர் அகமட் சுகர்னோ முகமட் ஜஹாரி (Ahmad Sukarno Mohd Zahari), சம்பவம் தொடர்பில் அந்த தகராறில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!