
கோலாலம்பூர், ஜூலை-6,
பிரபல மலாய் நடிகையான டத்தின் ஸ்ரீ உமி அய்டா, ஒரே ஓர் ஆப்பிள் பழத்தால் நியூ சிலாந்தில் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
சக கலைஞர்களோடு அண்மையில் அவர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
51 வயது உமி அய்டா, முதலில் தன்னுடன் உணவு எதனையும் கொண்டுச் செல்லவில்லை; MAS ஓய்வெடுக்கும் பகுதியில் இருந்த போது, பின்னர் விமானத்தினுள் சாப்பிடுவதற்காக ஒரே ஓர் ஆப்பிள் பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டார்.
அவரின் துரதிஷ்டம், விமானத்தினுள் அந்த ஆப்பிளை மறந்து அசதியில் அவர் தூங்கி விட்டார்.
பிறகு நியூ சிலாந்தில் தரையிறங்கியதும் விமான நிலைய அதிகாரிகள் அவரின் பையை scan செய்த போது உள்ளே ஆப்பிள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் மலேசிய ரிங்கிட்டுக்கு 1,000 வெள்ளி அபராதத்தை அவர் உடனடியாகச் செலுத்த வேண்டியதாயிற்று.
Threads சமூக ஊடகத்தில் அந்த அனுபவத்தைப் பகிர்ந்த உமி அய்டா, தனக்கு நேர்ந்தது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் எனக் கூறினார்.
நியூ சிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு காய்கறிகள் அல்லது பழங்கள் போன்றவற்றை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது.
அப்படியே எடுத்துச் செல்வதாக இருந்தால், பயணத்திற்கு முன்பே அதனை அறிவிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.